ஏப்ரல் 12 – இணைய வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் அமெரிக்காவின் ‘அமேசான்’ (Amazon) நிறுவனம், சித்திரக்கதைகள் (Comics) – ஐ ‘டிஜிட்டல்’ (Digital) முறையில் புத்தகங்களாக வெளியிடும் ‘காமிக்ஸோலஜி’ (ComiXology) நிறுவனத்தை வாங்க உள்ளது.
காமிக்ஸோலஜி நிறுவனம் கைடட் வியூ (Guided View) தொழில்நுட்பம் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு, இணைய வர்த்தகத்தில் சித்திரக்கதைகள் மற்றும் புதினங்கள் போன்றவற்றை விற்பனை செய்துவருகிறது.
காமிக்ஸோலஜி நிறுவனத்துடனான இந்த வர்த்தகம் பற்றி அமேசான் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் ஸ்டென்பெர்கர் கூறுகையில், “காமிக்ஸோலஜி நிறுவனத்தின் தற்போதய வர்த்தகமான, டிஜிட்டல் முறையில் சித்திரக்கதைகள் மற்றும் புதினங்களை உருவாக்கும் தொழில்நுட்பத்திற்கு அமேசான் சிறந்த மேடையாக இருக்கும். இதன் மூலம் சித்திரக்கதைகள் மற்றும் புதினங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முடியும்” என்று கூறியுள்ளார்.
அமேசான் மற்றும் காமிஸோலஜி நிறுவனங்களுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த அறிவிப்புகளை அந்நிறுவனங்கள் வெளியிடவில்லை.