Home கலை உலகம் சூர்யா இந்தி படத்தில் நடித்தால் அவருடன் நடிக்க விரும்புகிறேன் – கரீனா கபூர் !

சூர்யா இந்தி படத்தில் நடித்தால் அவருடன் நடிக்க விரும்புகிறேன் – கரீனா கபூர் !

580
0
SHARE
Ad

Suriya-Tamil-movie-Anjaanமும்பை, ஏப்ரல் 12 – பாலிவுட் நடிகை கரீனா கபூர் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அஞ்சான் படத்தில் குத்தாட்டம் ஆடுகிறார் என்று செய்திகள் வெளியாகின. இது குறித்து கரீனாவிடம் கேட்டதற்கு அவர் கூறுகையில்,

சூர்யாவை தமிழ் சினிமாவில் பெரிய நடிகர். உண்மையில் அவர் மிகப் பெரிய நடிகர்களில் ஒருவர். அவரை நான் மிகவும் மதிக்கிறேன். அஞ்சான் படத்தில் நான் குத்தாட்டம் போடுவதாக வந்த செய்திகளை பார்த்து கொஞ்சம் கோபமடைந்துவிட்டேன்.

நான் அஞ்சான் படத்தில் நான் குத்தாட்டம் ஆடவில்லை. மேலும், தமிழில் சூர்யா நடித்த சிங்கம்-2 படத்தின் இந்தி ரீமேக்கில் நான் நடித்து வருகிறேன்.

#TamilSchoolmychoice

எனக்கு சூர்யாவை நன்றாகத் தெரியும். சூர்யா மிகவும் திறமை வாய்ந்தவர். அவர் இந்தி படத்தில் நடித்தால் அவருடன் நடிக்க விரும்புகிறேன். அவருடன் சேர்ந்து நடிப்பது மகிழ்ச்சியும், கௌரவமும் கூட என்றார் கரீனா கபூர்.