கோலாலம்பூரில் மலபார் நிறுவனத்தின் புதிய கிளை – கரீனா கபூர் திறந்து வைக்கிறார்!

    738
    0
    SHARE
    Ad

    கோலாலம்பூர், மே 8 – இந்தியாவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மலபார் குழுமத்தின், மலபார் கோல்டு & டைமண்ட் நிறுவனம் மலேசியாவில் தனது முதல் கிளையை நாளை திறக்கவுள்ளது.

    இது அந்நிறுவனத்தின் 133-வது கிளை ஆகும்.

    6vqQ7tN

    #TamilSchoolmychoice

    கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள இந்த கிளையை நாளை (மே 9) மாலை 5.00 மணியளவில் பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கிறார்.

    கடந்த ஆண்டு, சிங்கப்பூர் சிராங்கூன் சாலையில், மலபார் கோல்ட் & டைமண்ட்ஸ்-ன் 114வது கடை திறக்கப்பட்டது. சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் பொதுத் தூதரான திரு கோபிநாத் பிள்ளை அதை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

    மலபார் கோல்டு & டைமண்ட் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக கரீனா கபூர் செயல்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    – ஃபீனிக்ஸ்தாசன்