Home நாடு தண்டனை காலத்திற்கு பிறகு நூர் பிட்ரி சுதந்திர மனிதர் – துணை ஐஜிபி

தண்டனை காலத்திற்கு பிறகு நூர் பிட்ரி சுதந்திர மனிதர் – துணை ஐஜிபி

667
0
SHARE
Ad

கோலாலம்பூர், மே 8 – சிறுவர் ஆபாச படங்களை வைத்திருந்த குற்றத்தின் பேரில் இங்கிலாந்தில் தண்டனை பெற்றுள்ள மலேசிய மாணவர் நூர் பிட்ரி, தமது 18 மாத சிறைத்தண்டனைக்குப் பின்னர் சுதந்திர மனிதராக நடமாடலாம் என துணை ஐஜிபி டத்தோஸ்ரீ நூர் ரஷிட் இப்ராகிம் கூறினார்.

Noor Rashid Ibrahim

23 வயதான நூர் பிட்ரி, இங்கிலாந்தில் புரிந்த குற்றத்திற்காகவே தண்டனையை அனுபவித்து வருவதாகவும், அவர் மலேசியாவில் குற்றம் புரியவில்லை என்றும் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் சுட்டிக்காட்டினார்.

#TamilSchoolmychoice

“எனினும், அத்தகைய குற்றத்தை அவர் மலேசியாவில் புரிவாரேயானால், நிச்சயமாக அவர் மீது நடவடிக்கை எடுப்போம். அதேவேளையில், இங்கிலாந்தில் அவர் தண்டனைக் காலத்தை அனுபவித்த பின்னர் சுதந்திர மனிதராகவே கருதப்படுவார்,” என்றார் நூர் ரஷிட்.

நாடு திரும்பிய பின்னர் நூர் பிட்ரி கண்காணிக்கப்படுவாரா? என்று எழுப்பப்பட்ட் கேள்விக்கு, இல்லை என அவர் பதிலளித்தார்.

“குற்றவாளிகள் மற்றும் சந்தேக நபர்கள் குறித்த தகவல்களை நாங்கள் ஆவணங்களாக்கி வைத்திருப்போம்,” என்று மட்டும் அவர் விளக்கமளித்தார்.

பாலியல் குற்றவாளிகள் தொடர்பில் மலேசியாவில் தனி பதிவேடு தற்போது இல்லை என்று குறிப்பிட்ட அவர், அதற்கான தேவை எழும் பட்சத்தில் தனி பதிவேடு உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.