Home நாடு நூர் பிட்ரிக்கு தேவை மறுவாழ்வு; கண்டனங்கள் அல்ல – மாரா தலைவர்

நூர் பிட்ரிக்கு தேவை மறுவாழ்வு; கண்டனங்கள் அல்ல – மாரா தலைவர்

625
0
SHARE
Ad

கோலாலம்பூர், மே 6 – லண்டனில் 30,000 சிறுவர் ஆபாச படங்கள் வைத்திருந்த வழக்கில் சிக்கியுள்ள மலேசிய மாணவர் நூர் பிட்ரி விவகாரத்தில், தாங்கள் எடுத்த முடிவில் இருந்து பின் வாங்கிக் கொள்ளப் போவதில்லை என மாரா (Majlis Amanah Rakyat -Mara) அறிவித்துள்ளது.

annuar

அம்மாணவருக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்குவதாக மாரா அறிவித்ததைத் தொடர்ந்து இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுதின் உட்பட அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களும், பொதுமக்கள் பலரும் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள மாரா தலைவர் டான்ஸ்ரீ அனுவார் மூசா, நூர் பிட்ரி என்ற அந்த 23 வயது மாணவருக்கு கண்டனம் தெரிவிப்பதைக் காட்டிலும் மறுவாழ்வுக்கு உதவுவது தான் சிறந்தது என்று தெரிவித்துள்ளார்.

“தனிப்பட்ட முறையில், என்னைப் பொறுத்தவரையில் அந்த இளம் மாணவர் மறுவாழ்வு பெற்று படிப்பைத் தொடர வேண்டும் என்பது தான்” என்று அனுவார் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், சிறை தண்டனை அனுபவித்து வரும் அம்மாணவருக்கு இப்போதைக்கு தேவை மருத்துவ சிகிச்சை மட்டுமே, கண்டனங்கள் அல்ல என்றும் அனுவார் தெரிவித்துள்ளார்.