Home கலை உலகம் மீண்டும் வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் அடுத்தப் படம்!

மீண்டும் வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் அடுத்தப் படம்!

608
0
SHARE
Ad

dhansuh vetசென்னை, மே 6 – மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார். அதற்கான அறிவிப்பை இன்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்த ‘காக்கா முட்டை’ படம் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது.

அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. தனுஷ், வெற்றிமாறன், ஐஸ்வர்யா மற்றும் ‘காக்கா முட்டை’ படத்தில் நடித்த இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

#TamilSchoolmychoice

படத்தில் நடித்த சிறுவர்கள் விக்னேஷ் மற்றும் ரமேஷ் இருவரின் படிப்பிற்கான செலவுகளின் பொருப்பினை தாங்களே ஏற்பதாக தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருவரும் நிகழ்ச்சியில் தெரிவித்தனர்.

வெற்றிமாறன் நடிப்பில் தனுஷ் அடுத்து எப்பொழுது நடிக்கபோகிறார் என்று நிருபர்கள் கேட்டதற்கு, செப்டம்பரில் புதிய படம் தொடங்கவிருப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய இரண்டு படமும் மொத்தமாக ஆறு தேசிய விருதுகளைப் பெற்றது.  அடுத்தப் படத்திலும் இவர்கள் இணையவிருப்பதால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.