Home நாடு “எனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது” – மாரா தலைவர் விளக்கம்

“எனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது” – மாரா தலைவர் விளக்கம்

567
0
SHARE
Ad

கோலாலம்பூர், மே 8 –  லண்டனில் சிறுவர் ஆபாச படங்களை வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்ட மலேசிய மாணவர் நூர் ஃபிட்ரியின் நடவடிக்கைகளை தாம் ஆதரிக்கவில்லை என்று மாரா தலைவர் டான்ஸ்ரீ அனுவார் மூசா தெரிவித்துள்ளார்.

annuar

நூர் ஃபிட்ரிக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென தாம் தெரிவித்த கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

“ஆபாச நடவடிக்கைகளை மாரா ஆதரிப்பதாக சிலர் குற்றம்சாட்டியுள்ளனர். நூர் ஃபிட்ரிக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கப்படுவது தொடர்பிலான விவகாரம் குறித்து நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன,” என தனது ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் அனுவார் மூசா குறிப்பிட்டுள்ளார்.

‘இரண்டாம் வாய்ப்பு’ என்பது தொடர்பில் அந்தப் பதிவில் அவர் சில விளக்கங்களையும் அளித்துள்ளார்.

“நூர் ஃபிட்ரி வெளிநாட்டில் படிக்க ஆதரவு தரப்படுமா? என்றால் அதற்கு ஆதரவில்லை என்பதே பதில். அதேசமயம் அவரது மறுவாழ்வுக்கும் மனோத்துவ ஆலோசனைக்கும் ஆதரவுண்டா? என்று கேட்டால், அதற்கு ஆம் என்பதே பதில். ”

“எனினும் இதற்கு முன்பு பெற்றுள்ள கடனை அவர் முழுமையாகச் செலுத்தியிருக்க வேண்டும். உள்நாட்டில் அவர் படிப்பை தொடர அனுமதி அளிக்கப்படுமா?என்றால், ஆம் என்பதே பதில். அதேசமயம் அவருக்கு ஏதேனும் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்க வேண்டும்,” என்று அனுவார் மூசா விளக்கமளித்துள்ளார்.

நூர் ஃபிட்ரி தனது படிப்பை முடிக்க உதவ வேண்டுமென புதன்கிழமையன்று கருத்து தெரிவித்திருந்தார் அனுவார். இதையடுத்து இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுதின் உட்பட பலர் அவருக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.