Home Featured கலையுலகம் இன்ஸ்டாகிராம் பதிவுகள்: கரினா கபூரின் மகன்!

இன்ஸ்டாகிராம் பதிவுகள்: கரினா கபூரின் மகன்!

1104
0
SHARE
Ad

kareena kapoor-son-taimur

மும்பை – பல ஆண்டுகளாக தனது அழகாலும், கவர்ச்சியாலும் இந்திப் பட இரசிகர்களைக் கட்டிப் போட்டிருந்தவர் கரினா கபூர். பாரம்பரியமான ராஜ்கபூர் குடும்பத்தில் இருந்து வந்த இவரது குடும்பத்தில் ஏறத்தாழ அனைவருமே நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் ஆவர்.

புகழின் உச்சத்தில் இருக்கும்போதே மற்றொரு இந்திப் பட நடிகர் சைப் அலி கானைத் திருமணம் செய்தார். அந்தக் காலக் கனவுக் கன்னி ஷர்மிளா தாகூர் மற்றும் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் பட்டோடி நவாப் ஆகியோரின் மகன் சைப் அலி கான்.

#TamilSchoolmychoice

கரினா – சைப் அலிகான் இருவருக்கும் பிறந்த மகனுக்கு தைமூர் எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். தைமூர் என்ற பெயர் கூட முதலில் அறிவிக்கப்பட்டதும் சமூக ஊடகங்களில் சர்ச்சையானது.

kareena kapoor-son-taimur-1

காரணம், தைமூர் என்ற அரசன் மாவீரன் என்றாலும் ஏராளமானோரைக் கொன்று குவித்தவன் என வரலாற்றில் இடம் பிடித்தவன். அவன் பெயரை கரீனா ஏன் தனது மகனுக்கு வைக்கிறார் என்பதுதான் சர்ச்சை.

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் தனது மகன் தைமூருடன் கலந்து கொண்ட கரினா கபூர் அந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

kareena kapoor-after delivery-

கரினா கபூர் தனது தோழியுடன் – சில நாட்களுக்கு முன்னால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட படம்…

இதற்கிடையில், பிரசவத்துக்குப் பின்னர் கடுமையான உடற் பயிற்சிகள் மூலம் மீண்டும் தனது உடலைக் கட்டுக் கோப்பாக மாற்றியிருக்கிறார் கரினா.

மீண்டும் நடிக்க வருவாரா – அல்லது மகனைப் பார்த்துக் கொள்ளும் முழுநேரத் தாயாகி விடுவாரா – எனக் காத்திருக்கிறது, பாலிவுட்!

 

-செல்லியல் தொகுப்பு