Home Featured உலகம் இலண்டன் பாலம் மூடப்பட்டது – 20 பேர் மருத்துவமனையில்!

இலண்டன் பாலம் மூடப்பட்டது – 20 பேர் மருத்துவமனையில்!

1007
0
SHARE
Ad

london bridge attack-attacker-cannister

இலண்டன் – இங்குள்ள இலண்டன் பாலத்தில் நேற்று சனிக்கிழமை இரவு நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து 20 பேர் வரை அருகிலுள்ள 6 மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர்.

இந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்த அண்மைய விவரங்கள்:

  • தாக்குதல் நடைபெற்ற இடத்தில் கிடந்த இரண்டு சடலங்களில் ஒருவனின் உடலைச் சுற்றி வெடிகுண்டுக் குப்பிகள் (Cannister) கட்டப்பட்டிருந்தன. இதனால் தற்கொலைத் தாக்குதல்கார்களின் ஒருவனாக இவன் இருக்கலாம் என நம்பப்படுகின்றது.
  • இலண்டன் பாலத்தில் நடைபாதையில் நடந்து கொண்டிருந்தவர்கள் மீது வாகனம் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர், அருகிலிருந்து மதுபான விடுதிகளில் சனிக்கிழமை இரவை மது அருந்தி களித்துக் கொண்டிருந்த சிலரைத் தாக்குதல்காரர்கள் கத்தியால் குத்தினர்.
  • உடனடியாக பதில் நடவடிக்கையில் இறங்கிய இலண்டன் காவல் துறையினர் துப்பாக்கியால் திருப்பிச் சுட்டதில் பொதுமக்களில் சிலரும் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகினர் என முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • தாக்குதல்காரர்கள் மொத்தம் 5 பேர். இவர்களில் 3 பேர் காவல் துறையினரால் சுடப்பட்டனர். மேலும் இருவர் தப்பித்து ஓடிவிட்டனர். அவர்களைத் தேடிப் பிடிக்கும் வேட்டை தொடர்கிறது.
  • முதலில் வேன் போன்ற ஒரு வாகனம் கொண்டு இலண்டன் பாலத்தின் பாதசாரிகள் மீது மோதி விட்டு, பின்னர் சுற்று வட்டாரத்தில் மதுபான விடுதிகளில் இருந்தவர்களைக் கத்தியால் குத்தியதில் இதுவரை 6 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர்.