Home Featured உலகம் இலண்டன் பாலம் : 8 நிமிட பயங்கரம்! 6 மரணங்கள்! 48 பேர் மருத்துவமனையில்!

இலண்டன் பாலம் : 8 நிமிட பயங்கரம்! 6 மரணங்கள்! 48 பேர் மருத்துவமனையில்!

933
0
SHARE
Ad

london bridge attack-attacker-cannister

இலண்டன் – நேற்று சனிக்கிழமை இரவு இலண்டன் பாலம் வளாகத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் இதுவரை 6 பேர் கொல்லப்பட்டிருப்பதையும், 48 பேர் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டிருப்பதையும் இலண்டன் மெட்ரோபோலிடன் காவல் துறையினர் உறுதிப் படுத்தியிருக்கின்றனர்.

  • பயங்கரவாதத் தாக்குதல் உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 10.00  மணியளவில் (மலேசிய நேரம் இன்று அதிகாலை 6.00 மணி) அரங்கேற்றப்பட்டு எட்டே நிமிடங்களில் நடந்து முடிந்திருக்கின்றது. அதற்குக் காரணம், எட்டு நிமிடங்களுக்குள் அங்கு வந்து சேர்ந்த இலண்டன் காவல் துறையினரின் வேகமும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும்தான்!
  • இருப்பினும் அந்த எட்டு நிமிடத் தாக்குதலில் இதுவரை 6 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 48 பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் காவல் துறையினர் தாமதமாக வந்திருந்தால் இந்த பயங்கரவாதத் தாக்குதல்களினால் மேலும் கூடுதலான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும்.
  • அண்மையக் காலமாக பயங்கரவாதத் தாக்குதல்கள் இலண்டனில் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து, இரவு நேரங்களில் முழுமையான ஆயுதங்கள், முன்னெச்சரிக்கை சாதனங்கள் நிறைந்த கவச வாகனங்களுடன், ஆயுதம் தாங்கிய பயங்கரவாதத் தடுப்புப் படையினர் இலண்டன் நகரைச் சுற்றி வருகின்றனர் என்பதோடு, தயார் நிலையிலும் வைக்கப்பட்டிருக்கின்றனர்.
  • அந்த வகையில் ஒரு வாகனம் மூலம் இலண்டன் பாலத்தில் நடந்து கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்ற தகவல் கிடைத்த உடனேயே, சம்பவ இடத்திற்கு விரைந்த பயங்கரவாதத் தடுப்புக் கவச வாகனத்தினர் உடனடி நடவடிக்கையில் இறங்கி, தாக்குதல்காரர்களில் மூவரை சுட்டுக் கொன்றனர்

london bridge-file picஅமைதியான இலண்டன் பாலம் – கோப்புப் படம்

  • தப்பித்துச் சென்றிருக்கும் மேலும் இருவரைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டு இலண்டன் மாநகரம் முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
  • விரைவில் பொதுத் தேர்தலை சந்திக்கவிருக்கும் பிரிட்டனில், தங்களின் பிரச்சாரங்களை ஆளுங்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக பிரதமர் தெரசா மே தெரிவித்திருக்கிறார்.
  • பிரிட்டனுக்கு எல்லாவித உதவிகளையும் வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக அறிவித்திருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இதற்குப் பரிகாரம், தான் கொண்டு வர முனைந்திருக்கும் பயணத் தடைகள்தான் சரியான வழிகளில் ஒன்று என மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார்.
#TamilSchoolmychoice

london-bridge-attack-map-1இலண்டன் பாலம் வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலைக் காட்டும் வரைபடம்…

-செல்லியல் தொகுப்பு