Home கலை உலகம் தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள் – நடிகை கரீனா கபூர்!

தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள் – நடிகை கரீனா கபூர்!

663
0
SHARE
Ad

Kareena-Kapoor-8மும்பை, மே 10 – தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள் என்று நடிகை கரீனா கபூர் தன்னை பற்றி வதந்தி பரப்புவர்களை கேட்டுக் கொண்டுள்ளார். பாலிவுட் நடிகை கரீனா கபூர் பற்றிய வதந்திகளுக்கு குறைச்சலே கிடையாது.

கரீனாவுக்கும் அந்த நடிகைக்கும் பிரச்சனையாம், கரீனாவுக்கும் இந்த நடிகருக்கும் காதலாம் என்று பலவித வதந்திகள் அவ்வப்போது வரும். இந்நிலையில் இது குறித்து கரீனா கூறுகையில், எனக்கும் அவருக்கும் பிரச்சனையாம், இந்த நபருடன் நான் தகராறு செய்தேன் என்று கடந்த 10 ஆண்டுகளாக வதந்திகள் பரப்பி வருகிறார்கள்.

அடுத்தவர்களையும் பாருங்கள். ஏன் எப்பொழுது பார்த்தாலும் என்னைப் பற்றியே வதந்தியை பரப்புகிறீர்கள்? அது ஏன் அனைவரும் என்னை பற்றியே பேச வேண்டும். பிறரையும் பாருங்கள். தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள் என்று கரீனா கபூர் கூறியுள்ளார்.