Home தொழில் நுட்பம் அனிமேஷன் கதைகளை உருவாக்க புதிய அடோப் செயலி அறிமுகம்! 

அனிமேஷன் கதைகளை உருவாக்க புதிய அடோப் செயலி அறிமுகம்! 

433
0
SHARE
Ad

the-apple-adobe-war-escalates-using-flash-to-build-iphone-apps-banned-d20dd17b0aமே 10 – உலக அளவில் பெயர் பெற்ற மென்பொருள் வடிவமைப்பு நிறுவனமான அடோப், ஆப்பிளின் ஐஒஎஸ் சாதனங்களில் செயற்படக்கூடிய புதிய செயலி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.

‘அடோப் வாய்ஸ்’ (Adobe Voice) எனும் இந்த செயலி, அனிமேஷன் கதைகளை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஐஒஎஸ் 7.0 பதிப்பு இயங்குதளங்களிலும் செயற்படக்கூடியதாக இருப்பதுடன் 20,000-ம் மேற்பட்ட புகைப்படங்களை கொண்டுள்ளது. இந்த செயலியை
ஆப்பிள் சாதனங்களில் பதிவிறக்கம் செய்து இயக்கும் பொழுது, தொடு திரையில் எண்ணற்ற புகைப்படங்கள் தோன்றும். பயனர்கள் பதிவு பொத்தானை தொடுவதன் மூலம், படங்களுக்கு ஏற்றவாறு தங்கள் குரல்களைப் பதிவு செய்து அனிமேஷன் கதைகளை உருவாக்க முடியும்.

#TamilSchoolmychoice

இந்த செயலியினை Apple iTunes App Store தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.