Home கலை உலகம் நள்ளிரவு படப்பிடிப்பில் ஆர்யா தோளில் தூங்கிய ஹன்சிகா!

நள்ளிரவு படப்பிடிப்பில் ஆர்யா தோளில் தூங்கிய ஹன்சிகா!

680
0
SHARE
Ad

aryaசென்னை, மே 10 – ஆர்யா தோளில் தலை சாய்த்து ஓய்வாக தூங்கிய காட்சியை ஹன்சிகா வெளியிட்டிருக்கிறார். தனக்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகிகளை வளைத்து போடும் தந்திரம் தெரிந்தவர் ஆர்யா.

தற்போது அவரிடம் சிக்கி இருக்கிறார் ஹன்சிகா. மகிழ் திருமேனி இயக்கும் மீகாமன் என்ற படத்தில் ஆர்யா, ஹன்சிகா நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு நள்ளிரவில் நடந்து வருகிறது.

ஓய்வு அறையில் சென்று தூங்க கூட நேரமில்லாமல் பிசியாக உழைத்து கொண்டிருக்கும் ஆர்யாவும், ஹன்சிகாவும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து கண் உறங்கி ஓய்வு எடுக்கின்றனர்.

#TamilSchoolmychoice

ஒரு பக்கம் படப்பிடிப்பு தொடங்குவதற்கான பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கும் வேளையில், கோழி தூக்கம் போடும் வகையில் ஆர்யாவின் தோளில் சாய்ந்து கண் அயர்ந்தார் ஹன்சிகா. அதேசமயம் ஹன்சிகாவின் தலை மீது தலை சாய்த்து தூங்கினார் ஆர்யா. இந்த காட்சியை அங்கிருந்த ஒருவர் கேமராவில் படம் பிடித்தார்.

பின்னர் இது ஹன்சிகாவிடம் காட்டப்பட்டது. அதை பார்த்து சிரித்தவர் அப்படியே அந்த புகைப்படத்தை தனது இணையத்தள பக்கத்தில் போட்டு ரசிகர்களின் இதயத்தை பதம் பார்த்திருக்கிறார். ஹன்சிகாவின் இந்த அதிரடி விளையாட்டு, சிம்புவுடன் முறிந்த காதல் விவகாரத்தில் இருந்து தனது பேச்சை திசை திருப்புவதற்கான தந்திரம் என கூறப்படுகிறது.