பெங்களூர், மே 10 – 8 அணிகள் இடையிலான 7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ என்ற அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இந்த நிலையில் பெங்களூரில் 31 வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியும், பெங்களூர் அணியும் விளையாடி வருகின்றனர். போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பீல்டிங் தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 20 ஒவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது. பின்னர் 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக இருந்தது. கெய்ல் 4 ரன்களிலும், பட்டேல் 13 ரன்களிலும், கோலி ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தனர்.
அதிரடியாக விளையாடிய டிவில்லியர்ஸ் 26 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் பெங்களூர் அணி 20 ஒவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 32 ரன்களில் அபாரமாக வெற்றி பெற்றது. மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றிய சந்திப் சர்மா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.