Home இந்தியா அப்பாவி முஸ்லிம்களை கொலை செய்துவிட்டு பாரதிய ஜனதா கட்சி மன்னிப்பு கேட்கிறது-முலாயம் சிங் சாடல்!

அப்பாவி முஸ்லிம்களை கொலை செய்துவிட்டு பாரதிய ஜனதா கட்சி மன்னிப்பு கேட்கிறது-முலாயம் சிங் சாடல்!

611
0
SHARE
Ad

22-mulayam-singh4-600அலகாபாத், மார் 3 – அப்பாவி முஸ்லிம்களை கொலை செய்துவிட்டு பாரதிய ஜனதா கட்சி மன்னிப்பு கேட்கிறது என்று சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் விமர்சித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் பேசியதாவது,

நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு வேட்பாளர் இல்லை. அவர்கள் காங்கிரஸ் கட்சியை தடுக்க பார்க்கின்றனர். குஜராத்தில் கலவரம் நடந்த பொது படுகொலைகளை தடுக்க அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி தவறிவிட்டார். முதலில் முஸ்லிம் சமூக மக்களை கொலை செய்துவிட்டு பின்னர் மன்னிப்பு கேட்கிறது பாரதிய ஜனதா கட்சி.

குஜராத் கலவரம் எப்போது நடந்ததோ அப்போது நான் அங்கு எந்த ஒரு பாதுகாப்புமில்லாமல் சென்றேன். அது என்னுடையை தைரியத்தை வெளிபடுத்தியது. இஸ்லாமியர்களுக்கு அநியாயம் அளிக்கப்படுவதை சாஜ்வாடி கட்சி பொறுத்துக் கொள்ளாது என முலாயம்சிங் பேசினார்.

#TamilSchoolmychoice