Home இந்தியா தமிழகத்தில் அரிசி விலை உயர்வால் மாவு வகைகளின் விலையும் கிடு கிடு

தமிழகத்தில் அரிசி விலை உயர்வால் மாவு வகைகளின் விலையும் கிடு கிடு

880
0
SHARE
Ad

riceதமிழ் நாடு, பிப்.15-தமிழகத்தில், இட்லி அரிசி, பச்சரிசி ஆகியவற்றின் விலையில், கடும் உயர்வு ஏற்பட்டுள்ளதை அடுத்து, அவற்றை மூலப் பொருட்களாக கொண்டு தயார் செய்யப்படும், இட்லி மாவு, புட்டு மாவு, இடியாப்ப மாவு ஆகியவற்றின் விலையில் கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிலவும் வறட்சி காரணமாக நெல்லுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், வெளி மாநிலங்களில் இருந்து நெல்லை ஆலை அதிபர்கள், வியாபாரிகள் கொள்முதல் செய்து, அரிசி உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக இட்லி அரிசி, பச்சரிசி விலை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், அரிசி விலை கிலோவுக்கு, எட்டு ரூபாய் முதல், 15 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

#TamilSchoolmychoice

இதில், புட்டு, இடியாப்பம் தயாரிப்பில் முக்கிய பங்கான பச்சரிசியின் விலையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது. பச்சரிசி தற்போது கிலோ, 38 ரூபாய் முதல், 55 ரூபாய் வரை, விற்பனை செய்யப்படுகிறது.

இதே போல்,  தயார் செய்த இட்லி, தோசை மாவு தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் இட்லி அரிசி விலையிலும் கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, இட்லி கார் அரிசி, கிலோ, 36 ரூபாய் முதல், 45 ரூபாய் வரை, விற்பனை செய்யப்படுகிறது.

மாவு தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் அரிசி விலை உயர்வு ஏற்பட்டுள்ளதால், மாவு விலையிலும் உயர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் வரை, தயார் செய்த  இட்லி மாவு, பிரபல நிறுவனங்களின் தயாரிப்பு கிலோ, 22 ரூபாய் முதல், 30 ரூபாய் வரை, விற்பனை செய்யப்பட்டது.

நேற்று முதல் கிலோ, 30 ரூபாய் முதல், 40 ரூபாய் வரை, விற்பனை செய்யப்படுகிறது. இட்லி மாவு விலையை தொடர்ந்து புட்டு மாவு, இடியாப்ப மாவு ஆகியவற்றின் விலையிலும் உயர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் வரை, பச்சரிசி மாவு கிலோ, 28 ரூபாய்க்கு விற்றது, 34 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதே போல், புட்டு மாவு கிலோ, 55 ரூபாய் முதல், 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. நேற்று முதல் கிலோ, 70 ரூபாய் முதல், 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதே போல், இடியாப்ப மாவு கிலோ, 40 ரூபாய் முதல், 45 ரூபாய் வரை விற்றது, 55 ரூபாய் முதல், 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.