Home கலை உலகம் வடிவேலுவின் தெனாலிராமன், சிரிக்க தயாராகுங்கள் ரசிகர்களே!

வடிவேலுவின் தெனாலிராமன், சிரிக்க தயாராகுங்கள் ரசிகர்களே!

844
0
SHARE
Ad

Thenaliraman-151சென்னை, ஏப்ரல் 15 – மூன்றாண்டிற்கு முன்பு சினிமா வர்த்தகத்தின் உச்சத்திலிருந்தவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு. அரசியலில் அவர் செய்த பிரச்சாரம், மூன்றாண்டுகள் நடிப்புக்கு முழுக்கு போடவைத்தது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு முதல் முறையாக ஒரு பெரிய படத்தில் நாயகனாக, அதுவும் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார் வடிவேலு. அந்தப் படம் வரும் 18-ஆம் தேதி உலகமெங்கும் தெனாலிராமனாக ரசிகர்கள் வயிற்றைப் பதம் பார்க்கப் போகிறது.

இந்தப் படத்தை நியாயமாக தமிழ் சினிமாவே கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால் மோசமான அரசியல் வியாதியில் பீடித்திருக்கும் தமிழ் சினிமா, அமைதியாக மவுனம் காக்கிறது என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

தெனாலிராமன் படம் ஒரு சரித்திரக் கதை. நாம் வழிவழியாகப் பேசிக் களித்த தெனாலிராமனின் கதை இது. இதில் ஒரு மன்னர் பாத்திரமும் இடம்பெறுகிறது. அது கிருஷ்ணதேவராயர். ஆனால் அந்தப் பெயரைக் குறிப்பிடாமல் மாமன்னன் என்று பெயர் சூட்டியுள்ளனர், ஏனெனில் தேவையற்ற பல சர்ச்சைகளைத் தவிர்க்க.

அப்படி இருந்தும் இந்தப் படத்தை வெளியிடாமல் தடுக்க வழக்குப் போட்டுள்ளனர் தமிழகத்தில் குடியேறிய தெலுங்குக்காரர்கள் சிலர். இப்பிரச்சனைகளை மீறி வரு 18-ஆம் தேதி நம் கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவைக்க வருகிறது நகைச்சுவை தெனாலிராமன்.