Home இந்தியா ராகுலுக்கு திருமணம் செய்து வையுங்கள் – சிவசேனா!

ராகுலுக்கு திருமணம் செய்து வையுங்கள் – சிவசேனா!

541
0
SHARE
Ad

Rahul-Gandhi-Press-Club-of-Indiaமும்பை, ஏப்ரல் 15 – பாஜக கூட்டணி கட்சியான சிவசேனா, மோடி திருமணம் பற்றி பேசாமல் ராகுலுக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று காங்கிரஸ் கட்சிக்கு சிவசேனா பதிலடி கொடுத்துள்ளார்.

வதோதரா தொகுதியில் போட்டியிட  மோடி மனு செய்தபோது, யசோதாபென்  எனது  மனைவி என்று குறிப்பிட்டிருந்தார். இதை காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர்.  இதற்கு பாஜக கூட்டணி கட்சியான சிவசேனா பதிலடி கொடுத்துள்ளார்.

இதுபற்றி சாம்னா பத்திரிகை தலையங்கத்தில் எழுதியிருப்பதாவது, நரேந்திர மோடிக்கும், அவரது மனைவி யசோத பென்னுக்கும் இளம் வயதில் திருமணம் நடந்தது. பிறகு தனித்து வாழ்வது என்று இருவரும் பேசி முடிவுசெய்து பிரிந்தனர். மோடி பிரம்மச்சாரியாக மாறிவி்ட்டார்.

#TamilSchoolmychoice

மோடி திருமண விஷயத்தை தேசிய பிரச்சனை போல் காங்கிரஸ் கட்சியினர் பேசுகிறார்கள். மோடி திருமணம் பற்றி பேசினால் விலைவாசி குறைந்து விடுமா?. அல்லது நிலக்கர் ஊழலால் ஏற்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் இழப்பீடு வந்து சேருமா?.

மோடி திருமண விவகாரத்தை எழுப்பி அவரை சட்ட சி்க்கலில் ஆழ்த்தி விடலாம் என்று காங்கிரஸ் நினைத்தால்  அது முட்டாள்தனம்.   மோடி திருமணம் பற்றி பேசும் முன்பு காங்கிரஸ்காரர்கள்  ராகுலுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும்.

ராகுல் காந்தி ஒரு வெளிநாட்டு பெண்ணிடம் எப்படி பழகினார் என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.