Home இந்தியா தமிழக பிரச்சாரத்திற்கு வர ராகுல் காந்தி மறுப்பு!

தமிழக பிரச்சாரத்திற்கு வர ராகுல் காந்தி மறுப்பு!

519
0
SHARE
Ad

tamil_nadu_state_map_with_districts (2)சென்னை, ஏப்ரல் 15 – காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தமிழ் நாட்டுக்கு வந்து பிரச்சாரம் செய்ய மறுப்பதாகத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மட்டும் நாளை தமிழ்நாடு வருவார் என்றும், அதுவும் நாகர்கோவிலில் மட்டும் பிரச்சாரம் செய்து விட்டு கிளம்பிவிடுவார் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ராகுல் காந்தி எப்போது வருவார் என்று அவரிடம் கேட்டபோது அதுபற்றி தமக்கு எதுவும் தெரியாது என்று அவர் மழுப்பிவிட்டார்.

#TamilSchoolmychoice

நீண்ட கால இடை வெளிக்குப் பிறகு தனித்துப் போட்டியிடும் காங்கிரசுக்கு பிரச்சாரம் செய்ய நட்சத்திர பேச்சாளர்கள் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.