Home இந்தியா திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்தது டில்லி உச்சநீதிமன்றம்!

திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்தது டில்லி உச்சநீதிமன்றம்!

555
0
SHARE
Ad

india-transgender-empowerment-2012-6-2-5-30-55புது டில்லி, ஏப்ரல் 15 – இந்தியாவில் திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்து டில்லி உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இது வரலாற்றில் மிக முக்கியமான தீர்ப்பாகக் கருதப்படுகின்றது.

“திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலினம் வழங்குவது சமூக அல்லது மருத்துவ ரீதியான பிரச்சனை மட்டும் கிடையாது. இது மனித உரிமை அடிப்படையிலான பிரச்சனை. திருநங்கைகளும் இந்த நாட்டு குடிமக்கள் தான். அவர்களுக்கு கல்வி முதல் அனைத்து விதமான சலுகைகளுக்கும் உரிமை உள்ளது” என்று நீதிபதி கே.எஸ் ராதாகிருஷ்ணன் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

மாநில மற்றும் மத்திய அரசுகள் திருநங்கைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு இந்தியாவிலுள்ள அனைத்து நலத்திட்டங்களையும் வழங்க வேண்டும்.

#TamilSchoolmychoice

திருநங்கைகளுக்கு சம உரிமை கேட்டு கடந்த 2012 ஆம் ஆண்டு சில சமூக ஆர்வலர்களால் இந்த வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.