Home கலை உலகம் ஜெயம் ரவி படத்திலிருந்து நயன்தாரா நீக்கம்!

ஜெயம் ரவி படத்திலிருந்து நயன்தாரா நீக்கம்!

571
0
SHARE
Ad

09-jayamravi-2-600சென்னை, ஏப்ரல் 15 – சம்பளத்தை குறைத்துக்கொண்டு ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டபோதும், நயன்தாராவை கழற்றிவிட்டார் இயக்குனர். ஜெயம் ரவி, ஹன்சிகா நடிக்கும் படம் ரோமியோ ஜூலியட்.

இப்படத்தை லட்சுமணன் இயக்குகிறார். முதலில் இப்படத்தில் நடிக்க நயன்தாராவிடம் கதை சொன்னார் இயக்குனர். அவரும் கதையை கேட்டுவிட்டு நடிக்க சம்மதம் தெரிவித்தார்.

ஆனால் நயன்தாராவுக்கு பதில் ஹன்சிகா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். நயன்தாரா நடிப்பதாக சொல்லியும் அவருக்கு பதிலாக ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்தது ஏன் என்று இயக்குனரிடம் கேட்டபோது,

#TamilSchoolmychoice

நயன்தாராவிடம்தான் முதலில் இக்கதையை கூறினேன். அவருக்கு கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. தனது சம்பளத்தை குறைத்துக்கொண்டு இந்தகேரக்டரில் நடிக்க சம்மதம் என்று கூறினார்.

நானும் சந்தோஷமடைந்தேன். இந்தநிலையில்தான் ஜெயம் ரவி ஏற்கனவே அவரது சகோதரர் ராஜா இயக்கும் படத்தில் நயன்தாரா ஜோடியாக நடித்து வருகிறார் என்பதை அறிந்தேன்.

அடுத்தடுத்த படத்தில் ஒரே நாயகி ஜோடியாக நடித்தால் காட்சிகள் ஒன்றாகவே தோன்றும் என்பதால் ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்ய எண்ணினேன். இந்த விஷயத்தை நயன்தாராவிடம் நேரில் சந்தித்து தெரிவித்தபோது அவரும் அதை புரிந்துகொண்டு சரி என்று சொன்னார்.

படத்திலிருந்து மாற்றுவதற்கான காரணத்தை நயன்தாரா சரியாக புரிந்துகொண்டதற்காக அவருக்கு நன்றி கூறினேன் என்றார் இயக்குநர் லட்சுமணன்.