Home உலகம் லெபனான் தேர்தல்: வன்முறைகளை ஒழிக்க புதிய ஜனாதிபதி தேவை!

லெபனான் தேர்தல்: வன்முறைகளை ஒழிக்க புதிய ஜனாதிபதி தேவை!

721
0
SHARE
Ad

lebanon-elections1பெருத், ஏப்ரல் 17 –  லெபனானில் அதிகரித்து வரும் வன்முறைகளை தடுக்கவும் மற்றும் செயலிழந்து இருக்கும் நாட்டின் அரசியலமைப்பைச் சீர் செய்யவும், வரும் 23 ஆம் தேதி நடக்கும் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என அந்நாட்டு மக்களுக்கு நாடாளுமன்ற அவைத் தலைவர் நபி பெரி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மைக்கேல் சுலைமானின், ஆறு ஆண்டு கால ஆட்சி எதிர்வரும் மே மாத இறுதியில் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கொண்ட அவரின் வாரிசுகள் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளது. எனினும் அந்த நிகழ்வு சிரியாவுடன் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சனை காரணமாக, ஒன்றிரண்டு மாதங்களுக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த தனது முடிவை  லெபனானின் மரோனைட் கிறிஸ்துவ திருச்சபைத் தலைவர் கார்டினல் பெஷரா அல் ராயிடம் பெரி தெரிவித்துள்ளார். லெபனானான் அரசின் அரசியலமைப்பின் படி ஒரு மரோனைட் கிறிஸ்துவரே ஜனதிபாதி தேர்வுக்கு தகுதியானவராவர்.

#TamilSchoolmychoice

அண்டை நாடான சிரியாவில் ஏற்பட்ட உள்நாட்டுப் போராட்டத்தினால் மில்லியனுக்கு மேற்பட்ட அந்நாட்டு மக்கள் அகதிகளாக லெபனானில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனால் சரியான அரசு இன்றி, கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி இருக்கின்றது. இந்த நேரத்தில் நடக்க உள்ள தேர்தல் லெபனானின் தலை விதியை மாற்றி அமைப்பதாக இருக்கும் என கூறப்படுகின்றது.