Home நாடு கர்ப்பால் கார் விபத்து: லோரி ஓட்டுநரின் சிறுநீர் பரிசோதனையில் கஞ்சா!

கர்ப்பால் கார் விபத்து: லோரி ஓட்டுநரின் சிறுநீர் பரிசோதனையில் கஞ்சா!

520
0
SHARE
Ad

Karpal carகோலாலம்பூர், ஏப்ரல் 17 – ஜசெக தலைவர் கர்ப்பால் சிங் சென்ற வாகனம் மோதி விபத்திற்குள்ளான லோரியின், ஓட்டுநர் கஞ்சா உட்கொண்டுள்ளார் என முதற்கட்ட சிறுநீர் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து பேராக் மாநில காவல்துறைத் தலைவர் அக்ரில் சானி அப்துல்லா கூறுகையில், “முதற்கட்ட பரிசோதனையில் கஞ்சா உட்கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனினும் இந்த முடிவு இறுதி முடிவாகக் கருதப்படாது. இரண்டாவது பரிசோதனைக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

5 டன் எடை கொண்ட அந்த லோரி சிமெண்ட், இரும்பு மற்றும் மொசைக் கற்கள் போன்றவற்றை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice