Home நாடு “வாயை மூடு” – சுல்கிப்ளிக்கு கைரி பதிலடி!

“வாயை மூடு” – சுல்கிப்ளிக்கு கைரி பதிலடி!

615
0
SHARE
Ad

Zulkifli Noordinபெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 17 – இன்று அதிகாலை விபத்தில் மரணமடைந்த ஜசெக மூத்த தலைவர் கர்பால் சிங்கிற்கு பிரதமர் நஜிப் துன் ரசாக் உட்பட பலரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வரும் வேளையில், பெர்காசா உதவித்தலைவர் சுல்கிப்ளி நோர்டின் அதை ஹுடுட் சட்டத்திற்கு கிடைத்த ஒரு வெற்றியாக கருதுவதாக கருத்துத் தெரிவித்துள்ளார்.

“ஹுடுட் சட்டத்தை அமலாக்கம் செய்வதற்குத் தடையாக இருந்த கர்பாலை அல்லாஹ் தன்னிடத்தில் அழைத்துக் கொண்டார்” என்று டிவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அவர் கருத்து வெளியிட்ட ஒரு சில நிமிடங்களில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான கைரி ஜமாலுதீன், “வாயை மூடு, உண்மையில், வாயை மூடிக் கொண்டு இரு” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

தனது கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதைத் தொடர்ந்து, இன்னொரு டிவிட்டர் பதிவில், “என்னதான் இருந்தாலும், சட்டத்துறை சிறந்த மூத்த வழக்கறிஞரை இழந்துவிட்டது. கர்ப்பாலின் பெயர் வரலாற்றில் பதிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

பேராக் மாநிலம் கோபெங் அருகே நெடுஞ்சாலையின் இன்று அதிகாலை நடந்த கார் விபத்தில் கர்ப்பால் சிங் சம்பவ இடத்திலேயே காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.