Home கலை உலகம் இஸ்லாம் மதத்துக்கு மாறினாரா ஜெய்!

இஸ்லாம் மதத்துக்கு மாறினாரா ஜெய்!

875
0
SHARE
Ad

kanimozhiசென்னை, ஏப்ரல் 21 – இஸ்லாம் மதத்துக்கு மாறியுள்ளார் நடிகர் ஜெய் என தகவல் வெளியாகியுள்ளது. யுவன் சங்கர் ராஜாவையடுத்து இஸ்லாம் மதத்துக்கு நடிகர் ஜெய் மாறியதாக கோலிவுட்டில் பரபரப்பு எழுந்துள்ளது. இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார்.

இந்நிலையில் ராஜா ராணி, எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் ஜெய் இஸ்லாம் மதத்துக்கு மாறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி அவரது நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தபோது,

கடந்த ஆண்டு ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருந்தார். அப்போது முதல் இஸ்லாம் மத கோட்பாடுகளை கடைபிடிக்கிறார். ஒவ்வொரு வெள்ளியும் தர்கா செல்கிறார். இதற்கு காரணம் தெரியவில்லை.

#TamilSchoolmychoice

இஸ்லாம் மதத்தை பின்பற்றினாலும் அம்மதத்துக்கு மாறவில்லை என்றனர். ஜெய் தனது இணையத்தள பக்கத்தில் அல்ஹம்துலில்லாஹ் (எல்லா புகழும் இறைவனுக்கே) என்ற வார்த்தையை குறிப்பிட்டிருந்ததுதான் இந்த பரபரப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இதுபற்றி ஜெய்யிடம் கேட்டபோது, நான் இஸ்லாம் மதத்துக்கு மாறவில்லை என்றார். விரைவில் நஸ்ரியா ஜோடியாக ஜெய் நடித்துள்ள திருமணம் என்னும் நிக்ஹா என்ற படம் திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.