Home இந்தியா சோனியா, ராகுல் காந்தியால் நாட்டை எப்படி வழிநடத்த முடியும் – மோடி கேள்வி?

சோனியா, ராகுல் காந்தியால் நாட்டை எப்படி வழிநடத்த முடியும் – மோடி கேள்வி?

499
0
SHARE
Ad

modiசார்குஜா, ஏப்ரல் 21 – சட்டீஸ்கர் மாநிலம் சார்குஜாவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்  கூட்டத்தில் மோடி பேசினார். அப்போது அவர் பேசியதாவது, நேரு –  காந்தி குடும்பத்தினரையும் ராகுல் காந்தியின் மைத்துனர் ராபர்ட்  வதேராவையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.

அமேதி தொகுதியில் சோனியா காந்தி பிரச்சாரம் செய்தபோது அவர் கூறியதாவது, இங்கு போட்டியிடும் எனது  மகன் ராகுல் காந்தியை பார்த்துக் கொள்ளுங்கள், அவரது வெற்றி  உங்கள் கைகளில்தான் உள்ளது என்று சோனியா காந்தி கேட்டுக்  கொண்டார்.

இது குறித்து சார்குஜா பிரச்சாரக்  கூட்டத்தில் கருத்து தெரிவித்த நரேந்திர மோடி, தனது  தொகுதியையே நன்றாக கவனிக்க முடியாதவரால் எப்படி இந்த  நாட்டை வழிநடத்திச் செல்ல முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

#TamilSchoolmychoice

காங்கிரஸ் கட்சியின் ஆட்சி தாய் – மகன் அரசாகத்தான் இருந்தது.  வதேராவை பற்றி கூறுகையில், நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு  வேலை கிடைக்கவில்லை. ஆனால், ஜிஜாஜி (மைத்துனர்) வதேரா  மட்டும் முதலீடே செய்யாமல் அளவுக்கு அதிகமாக சொத்து  சேர்த்துள்ளார்.

தனது மகனை கவனித்துக் கொள்ளுமாறு அமேதி  தொகுதி மக்களிடம் கேட்டுக் கொள்ளும் சோனியா காந்தி, நம்மிடம்  கூறுகிறார், அவரது மகன் நாட்டை பார்த்துக் கொள்வாராம்.

இதில்  ஏதாவது கருத்து இருக்கிறதா? தனது தொகுதியையே கவனிக்க  முடியாதவரால், நாட்டை எப்படி வழி நடத்திச் செல்ல முடியும் என்று  மோடி கேள்வி எழுப்பினார்.