Home அவசியம் படிக்க வேண்டியவை கர்ப்பால் நினைவுகள் # 4 : “அரசாங்கத்தைக் கண்டு அஞ்சாதவர் கர்ப்பால் சிங்” – லிம்...

கர்ப்பால் நினைவுகள் # 4 : “அரசாங்கத்தைக் கண்டு அஞ்சாதவர் கர்ப்பால் சிங்” – லிம் குவான் எங்

488
0
SHARE
Ad

lemபினாங்கு, ஏப்ரல் 21 – அரசாங்கத்தைக் கண்டு நாம் அஞ்சக்கூடாது என்பதை செயலில் காட்டியவர் கர்ப்பால் சிங் என பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்  கூறினார்.

கர்ப்பாலின் இறுதிச் சடங்கு ஊர்வலம் நேற்று பினாங்கில்  நடந்தது. இதில் கலந்துகொண்ட பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் தனது இரங்கல் உரையில்  கூறியதாவது, “ஜெலுத்தோங் புலி கர்ப்பால் அடக்கு முறையை கண்டு அஞ்சாதவர். அவர் தனது கொள்கையில் உறுதியாக நின்றார். அதற்கு சாட்சி அவரது போராட்ட உணர்வும் உத்வேகமும் தான். 1988இல் கமுண்டிங் தடுப்புக் காவல் சிறையில் இருந்த போது அவரது துணிச்சலை நான் நேரிடையாகக் கண்டேன்” எனவும் லிம் குவான் எங் குறிப்பிடடார்.

2005-இல் அவர் விபத்தைச் சந்தித்த போது இடுப்புக்கு கீழே செயலற்றுப் போனபோதும் தனது சட்டப் போராட்டத் தொழிலைத் தொடர்ந்தார்.

#TamilSchoolmychoice

உடல் இயலாமைக்கு ஆளான போதும் இரு முறை மக்களவை அங்கத்தினராக முதன் முதலில் மலேசியாவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கர்ப்பால்.

“அரசாங்கத்தைக் கண்டு நாம் அஞ்சக்கூடாது என்பதை செயலில் காட்டியவர் கர்ப்பால் சிங். கர்ப்பாலின் மரணம் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் ஒரு அழியாத துர் செய்தியாக உள்ளது” என்றும் லிம் குவான் எங்.

(பின்குறிப்பு : மறைந்த கர்ப்பால் சிங், குடும்ப உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள், வழக்கறிஞர்கள் என பலரது மனங்களிலும் பல்வேறு காரணங்களால் இடம் பிடித்தவர். அவரைப் பற்றி மற்றவர்கள் கூறியுள்ள விவரங்கள் ‘கர்ப்பால் நினைவுகள்’ என்ற தலைப்பில் தொடர்ச்சியாக, அவருக்கு அஞ்சலியாக அடுத்த சில நாட்களுக்கு வெளிவரும்)