Home கலை உலகம் வெங்கட்பிரபு மீது கவர்ச்சி நடிகை சோனா பாய்ச்சல்!

வெங்கட்பிரபு மீது கவர்ச்சி நடிகை சோனா பாய்ச்சல்!

715
0
SHARE
Ad

sonசென்னை, ஏப்ரல் 21 – குசேலன், குரு என் ஆளு உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்திருப்பவர் சோனா. தற்போது தனக்கு கொடுக்கவேண்டிய கடனை திருப்பி கொடுக்காத வெங்கட்பிரபு மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளார் சோனா.

இது பற்றி சோனா கூறியதாவது, சில வருடங்களுக்கு முன் இயக்குநர் வெங்கட்பிரபுவும், நானும் நட்புடன் இருந்தோம். எனக்கு ஒரு படம் இயக்குவதாக கூறியிருந்தார். இதற்காக என்னிடம் பணம் வாங்கிருந்தார்.

சில காரணங்களால் அப்படம் எடுக்க முடியவில்லை. ஆனால் என்னிடம் வாங்கிய பணத்தை அவர் திருப்பி தரவில்லை. இது சர்ச்சையாக உருவானபோது பணத்தை எப்படியாவது திரும்ப தருவதாக எனக்கு தகவல் அனுப்பினார்.

#TamilSchoolmychoice

ஆனால் எனக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. சட்டப்படி இப்பிரச்னையை தீர்க்க முடியும். இந்த போராட்டத்தில் நான் தனி ஆளாக இருக்கிறேன் என சோனா கூறினார்.

ஏற்கனவே இப்பிரச்னையின்போது பதில் அளித்திருந்த வெங்கட்பிரபு, என் மீது சோனா சொல்லும் புகாரில் உண்மை இல்லை. அவரிடம் பணம் வாங்கவில்லை என்று குறிப்பிட்டார். மீண்டும் இப்பிரச்னை எழுந்துள்ளது. ஆனால் வெங்கட்பிரபு மவுனம் காக்கிறார்.