வாஷிங்டன், ஏப்ரல் 21 – வளர்ந்து வரும் விஞ்ஞான யுகத்தில் ஒவ்வொரு நாடும் புதிது புதிதாக போர்க்கருவிகளை உருவாக்கி வருகின்றன. அந்தவகையில், வெடிபொருள் உதவியின்றி இயங்குகிற மின்காந்த துப்பாக்கி ஒன்றை முதன்முதலாக பயன்படுத்த அமெரிக்க கடற்படை திட்டமிட்டுள்ளது.
‘ரெயில்கண்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த துப்பாக்கி, ஒலியை விட 7 மடங்கு வேகத்தில் தோட்டாக்களை செலுத்தும் திறன் வாய்ந்தது. மேலும் இதன் மூலம் 160 கிலோ மீட்டர் தூரம் வரையிலான இலக்குகளை தாக்க இயலும்.
இதில் உள்ள மின்காந்த விசை, தோட்டாக்களை வேகமாக வெளிச்செலுத்த உதவும். இதன் மூலம் பாரம்பரிய துப்பாக்கிகளை விட அதிக வேகத்தில் இந்த துப்பாக்கி செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விரைவில் இதை சோதனையிட இருக்கிறார்கள்.