இஸ்லாமாபாத், ஏப்ரல் 23 – பாகிஸ்தான் ராணுவம் போர் பயிற்சி நடவடிக்கைகளில், ஒரு கட்டமாக 290 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து சென்று தாக்கும் ‘ஹட்ஃப் IIIகஸ்னவி’ (Hatf III Ghaznavi) ஏவுகணையை அந்நாடு நேற்று பரிசோதித்துள்ளது.
இந்த பரிசோதனை முயற்சி குறித்து ராணுவ தலைமையகம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், “வெற்றிகரமாக இந்த பரிசோதனை முயற்சி அமைந்துள்ளது. இதற்காக போர் பயிற்சியில் ஈடுபட்ட வீரர்கள், ராணுவ ஆராய்ச்சியாளர்கள், பொறியாளர்கள் ஆகியோரை பாகிஸ்தான் ஜனாதிபதி மம்நூன் ஹுசெய்ன், பிரதமர் நவாஸ் ஷரிப் ஆகியோர் பாராட்டினர்” என்று அறிவித்துள்ளது.
பாதுகாப்புக் காரணங்கள் கருதி இந்த சோதனை நடத்தப்பட்ட இடம் மற்றும் அது தொடர்பான எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.