Home India Elections 2014 மோடிக்கு வாக்களித்து இந்தியாவின் பிரதமராக்குங்கள் – விஜயகாந்த்

மோடிக்கு வாக்களித்து இந்தியாவின் பிரதமராக்குங்கள் – விஜயகாந்த்

501
0
SHARE
Ad

Vijaஆலந்துர், ஏப்ரல் 23 – பா.ஜ.க வேட்பாளர் நரேந்திர மோடியை பிரதமராக்க நீங்கள் எங்கள் வேட்பாளர் மாசிலாமணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கேட்டு கொண்டார்.

சென்னை நங்கநல்லூர் மார்க்கெட்டில் செவ்வாய்க் கிழமை இறுதி கட்ட வாக்கு சேகரிப்பு மற்றும் பொது கூட்டம்  நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விஜயகாந்த பேசியதாவது,

காங்கிரஸ் 10-ஆண்டுகள் ஆட்சி காலத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை மேலும் ஊழலை தடுக்க முடியவில்லை, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வசதியை ஏற்படுத்தி கொடுக்க முடியவில்லை.

#TamilSchoolmychoice

எனவே, மக்களுக்கு நன்மை செய்யும் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை நீங்கள் பிரதமராக தேர்ந்தெடுக்க வேண்டும். அவரிடம் நான் சில கோரிக்கைகள் வைத்துள்ளேன் அதை பா.ஜ.க ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றி தருவதாக தெரிவித்துள்ளனர்.

தமிழகத்து நல்ல குடி தண்ணீர் வசதி, தடையில்லா மின்சார வசதி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகளை கொடுத்துள்ளனர்.

இந்த நன்மைகள் கிடைத்திட நீங்கள் நமது நரேந்திர மோடியை பிரதமராக்க, ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் மாசிலாமணிக்கும் பம்பரம் சின்னத்திற்கும் மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற வேட்பாளர் காமராஜ்க்கு முரசு சின்னத்திற்கும் வாக்களித்து, வெற்றி பெற செய்ய வேண்டும் என்று விஜயகாந்த் கேட்டுக் கொண்டார்.