Home கலை உலகம் கோச்சடையான் கமல் நடிக்க வேண்டிய படம் – ரஜினிகாந்த்

கோச்சடையான் கமல் நடிக்க வேண்டிய படம் – ரஜினிகாந்த்

647
0
SHARE
Ad

rajini (1)சென்னை, ஏப்ரல் 23 – கோச்சடையான் கமல் நடிக்க வேண்டிய படம். நான் நடித்தது கடவுள் தந்த பரிசு என்று ஹைதராபாத்தில் நடந்த விழாவில் ரஜினிகாந்த் பேசினார்.

கோச்சடையான் தெலுங்கில் “விக்கிரம சிம்ஹா” என்ற பெயரில் வெளியாகிறது. அதன் பாடல்கள் வெளியீட்டுவிழா ஹைதராபாத்தில் நடந்தது.

இவ்விழாவில் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், சௌந்தர்யா அஸ்வின், ரஜினியின் நண்பரும் நடிகருமான மோகன்பாபு, அவரது மகள் மஞ்சு, தாசரி நாராயணராவ், ராமநாயுடு உள்பட ஏராளமான திரை பிரபலங்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

இவ்விழாவில் ரஜினி பேசியதாவது, கோச்சடையான் படம் கமல் நடிக்க வேண்டிய படம். நான் நடித்தது கடவுள் தந்த பரிசு என்று ரஜினிகாந்த் உருக்கமாக பேசியுள்ளார்.