Home India Elections 2014 வாரணாசியில் போட்டியிடுவது எனக்கு கிடைத்த பாக்கியம் – மோடி

வாரணாசியில் போட்டியிடுவது எனக்கு கிடைத்த பாக்கியம் – மோடி

573
0
SHARE
Ad

Narendra Modi Representing BJP

வாரணாசி, ஏப்ரல் 24 – ஆர்எஸ்எஸ், பாஜ தொண்டர்கள் புடை சூழ பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

வாரணாசி ஆட்சியர் அலுவலகத்தில் மோடி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தான் வாரணாசி தொகுதியில் போட்டியிட புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்றும், தனக்கு ஆதரவாக இருக்கும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

#TamilSchoolmychoice

வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதால் கங்கை மாதாவே தனக்கு ஆசி வழங்குவதாக எண்ணி தான் நெகிழ்ச்சியடைவதாகவும், நாட்டு மக்கள் அனைவரின் ஆசியையும் கோருவதாகவும் மோடி குறிப்பிட்டார்.