Home கலை உலகம் முன்னணி தமிழ் சினிமா நடிகைகள் வாக்களிக்கவில்லை!

முன்னணி தமிழ் சினிமா நடிகைகள் வாக்களிக்கவில்லை!

1208
0
SHARE
Ad

heroeinasசென்னை, ஏப்ரல் 24 – தமிழ் சினிமாவில் உச்சத்திலிருக்கும் பெரும்பாலான நடிகைகள் இன்று வாக்களிக்கவில்லை. ஏனெனில், சென்னையிலோ அல்லது  பிற மாநிலங்களிலோ வாக்குரிமையே இல்லை.

பொதுவாக தமிழ் சினிமாவில் முன்னணியிலிருக்கும் நடிகைகள் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல. வட மாநிலங்கள், ஆந்திரா அல்லது கேரளாவைச் சேர்ந்தவர்கள்தான் தமிழில் பெரும்பாலான நடிகைகள்.

இவர்களுக்கு சொந்த ஊரில் வாக்குரிமை இருக்குமா என்பதும் சந்தேகம்தான். காரணம் 16 வயதிலேயே பெரும்பாலானோர் நடிக்க வந்துவிடுகிறார்கள்.

#TamilSchoolmychoice

நடிக்க வந்த பிறகு சென்னையில் இருந்தாலும், வாக்களிப்பது குறித்த ஆர்வம் இவர்களில் பெரும்பாலானோர்க்கு இல்லை. வாக்களிக்கச் சென்றால் ரசிகர்கள் கூட்டம் கூடிவிடுவார்கள், பாதுகாப்புப் பிரச்சனை என்றெல்லாம் இருப்பதால் பொதுவாகவே நடிகைகள் வாக்களிக்க வருவதில்லை.

முன்னணி நடிகைகளான ஹன்சிகா, தமன்னா, நயன்தாரா, காஜல் அகர்வால், தமிழ்நாட்டு மருமகளாகப் போகும் அமலா பால், ப்ரியா ஆனந்த், ஸ்ரீதிவ்யா இவர்களில் யாருக்குமே வாக்குரிமை இல்லை.

இவர்களுக்கு ஒருவேளை அவரவர் மாநிலங்களில் வாக்குரிமை இருந்தாலும் வாக்களிக்க போகவில்லை. தமிழ் நடிகை த்ரிஷாவுக்கு சென்னையில் வாக்குரிமை உள்ளது. ஆனால் அவர் ஊரில் இல்லாததால் வாக்களிக்கவில்லை என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.