Home அரசியல் பிரதமர் உயிருக்கு ஆபத்தா? – குவான் எங் ஆவேசம்

பிரதமர் உயிருக்கு ஆபத்தா? – குவான் எங் ஆவேசம்

474
0
SHARE
Ad

lim-guanபினாங்கு, பிப்.15- பினாங்கு மாநிலத்தில்  பிரதமர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் இருந்ததாகக் கூறுவது அம்மாநிலத்தின் தோற்றத்தைக் கெடுப்பதால் அது பற்றி பிஎன் விளக்க வேண்டும் என்று முதலமைச்சர் லிம் குவான் எங் பறைச்சாற்றினார்.

“பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் பாதுகாப்புக்கு மிரட்டல் ஏற்பட்டதாக கூறியதை மாநில பிஎன் தலைவர் டெங் சாங் இயோ இன்னமும் மீட்டுக்கொள்ளவில்லை”, என்று லிம் இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் தெரிவித்தார்.

“பிரதமரின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. அவருக்கு மிரட்டல் விடுத்தது யார்? பினாங்கு முதலமைச்சராகிய எனக்கு அது பற்றித் தெரிவிக்கப்படவில்லை.

#TamilSchoolmychoice

“பினாங்கு மாநிலத்தின் காவல் துறை தலைவர் அப்துல் ரஹிம் ஹனாபிகூட அது பற்றி எனக்குத் தெரிவிக்கவில்லை. இதிலிருந்து டெங் சொல்வது  சுத்த அபத்தம் என்பது தெளிவாகத் தெரிகிறது. பிரதமரின் உயிருக்கு ஆபத்து இருந்ததாக அவர் சொல்வதில் உண்மையில்லை. அக்கூற்றானது பொய்யாகும்”.

நேற்று சீனமொழி நாளேடான சின் சியு டெய்லியில் வெளிவந்த செய்தி பற்றிக் கருத்துரைத்தபோது லிம் இவ்வாறு கூறினார். அச்செய்தியில் டெங், திங்கள்கிழமை ஹான் சியாங் கல்லூரியில் நடைபெற்ற பிஎன் சீனப்புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்புக்கு வருகை புரிந்த பிரதமரைத் தாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

சிறப்புப் போலீஸ் பிரிவு முன்கூட்டியே அந்த இடத்தைவிட்டுச் செல்லுமாறு நஜிப்புக்கு ஆலோசனை கூறியதாகவும் டெங் அதில் குறிப்பிட்டிருந்தார்.பக்காத்தான் ரக்யாட் ஆதரவாளர்கள் சிலர், அந்நிகழ்ச்சியைக் கெடுக்கவும் நஜிப்மீது தாக்குதல் நடத்தவும் முயன்றார்கள் என்றும் டெங் அந்நாளேட்டிடம் கூறினார்.

டெங், இவ்வாறு “பொறுப்பற்ற முறையில்” பேசியதை மீட்டுக்கொள்ள வேண்டும் என்று லிம் வலியுறுத்தினார். டெங் கூறிய கூற்றானது  மாநிலத்தின் பெயரைக் கெடுத்து விட்டது. தென்கொரிய பாடகர் சை மிரட்டப்பட்டதாகக் கூறியதையும் டெங் மீட்டுக்கொள்ள வேண்டும். சைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் எதுவும் நடக்கவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

கெராக்கான் தலைமைச் செயலாளருமான டெங், இதற்கு விளக்கமளிக்க வேண்டும். இல்லையென்றால், பினாங்கில் குற்றச்செயல்களைக் குறைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சி எல்லாம் வீண் என்றாகிவிடும் என்று லிம் குறிப்பிட்டார்.