Home இந்தியா வெற்றி எங்களுக்கே – அழகிரி

வெற்றி எங்களுக்கே – அழகிரி

657
0
SHARE
Ad

azlagiriமதுரை, ஏப்ரல் 25 – மதுரையில் தனது வாக்கை பதிவு செய்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வெற்றி எங்களுக்கே என்று தெரிவித்தார்.

மதுரை மக்களவைத் தொகுதி, முத்துப்பட்டி வீரமுடையான் நடுநிலைப்பள்ளியில் வியாழக்கிழமை காலை 10.15 மணிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது மனைவி காந்தி அழகிரி, மகன் தயாநிதி அழகிரி மற்றும் மருமகளுடன் வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.

பின்னர், செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி கேட்க தயாரான போது, ஒரே வார்த்தையில் எங்களுக்கே வெற்றி என்று கூறிச் சென்றார்.

#TamilSchoolmychoice

நாடாளுமன்றத் தேர்தல் அறிவித்ததிலிருந்து பல்வேறு பகுதிக்கு சென்று  ரஜினி முதல் வைகோ வரை பல பிரபலங்களை சந்தித்து ஆலோசனை என்று செல்லும் இடமெல்லாம் பேட்டியளித்து பரபரப்பு ஏற்படுத்தியவர், மு.க.அழகிரி.

இதனால் தேர்தல் நாளன்று இவர் பரபரப்பாக பேட்டியளிப்பார் எனக் காலை முதலே வாக்குச்சாவடியில் காத்திருந்த பத்திரிகையாளர்களுக்கு இந்த பதில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.