Home கலை உலகம் கவர்ச்சி தேவதையாக ஜொலிப்பேன் – ஸ்ரீதிவ்யா

கவர்ச்சி தேவதையாக ஜொலிப்பேன் – ஸ்ரீதிவ்யா

936
0
SHARE
Ad

sriசென்னை, ஏப்ரல் 25 – வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடித்த ஆந்திர நடிகை ஸ்ரீதிவ்யா, அதன்பின் கவர்ச்சிகரமான கதைகளில் நடிக்க தயங்கியதால், பெரிய பட்ஜெட் படங்கள் நழுவிச் சென்றன.

அதனால், யோசித்து பார்த்த ஸ்ரீதிவ்யா, தற்போது நடிக்கும் புதிய படங்களில், இயக்குனர்கள் எதிர் பார்த்ததை விட, கூடுதல் கவர்ச்சி சேவை ஆற்றி வருகிறார்.

இதுபற்றி ஸ்ரீதிவ்யா கூறுகையில், முதல் படத்தில் என்னை கிராமத்து வேடத்தில் பார்த்து ரசித்த ரசிகர்கள், ஆதரவு தெரிவித்தனர். அதனால், குடும்ப பாங்கான வேடங்களில் நடிக்க விரும்பினேன்.

#TamilSchoolmychoice

ஆனால், இயக்குநர்களின் நடிகையாக இருந்தால்தான், சினிமாவில் வளர முடியும் என்பதால், இப்போது நானும், கவர்ச்சிக்கு தயாராகி விட்டேன். இனிமேல் நடிக்கும் படங்களில், கவர்ச்சி தேவதையாக ஜொலிக்கப் போகிறேன்’ என்றார் ஸ்ரீதிவ்யா.