Home இந்தியா மோடி அலை வீசவில்லை, காங்கிரஸ் தான் வெற்றி பெறும் – மன்மோகன் சிங்

மோடி அலை வீசவில்லை, காங்கிரஸ் தான் வெற்றி பெறும் – மன்மோகன் சிங்

534
0
SHARE
Ad

Tamil_Daily_News_6888544560கவுகாத்தி, ஏப்ரல் 25 – நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த பின்னர் கவுகாத்தில் செய்தியாளர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

நாட்டில் மோடி அலை வீசுவதாக எனக்கு தெரியவில்லை. ஊடகங்கள்தான் இதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்திக்கும் என்று நினைக்கவில்லை.

மே 16-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரையில் காத்திருங்கள். காங்கிரஸ் தான் தனிபெரும்பான்மை பலத்தில் வெற்றி பெறும் என்றார் மன்மோகன் சிங்.