Home கலை உலகம் இணையத்தளத்தில் வெளியான ஆபாச தம்படம் (செல்ஃபி) குறித்து ஸ்ரீதிவ்யா கருத்து!

இணையத்தளத்தில் வெளியான ஆபாச தம்படம் (செல்ஃபி) குறித்து ஸ்ரீதிவ்யா கருத்து!

1496
0
SHARE
Ad

sri thivyaசென்னை, மார்ச் 23 – வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜீவா, வெள்ளக்காரதுரை, காக்கி சட்டை என வரிசையாக வெற்றி படங்கள் கொடுத்து தமிழ் மக்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் ஸ்ரீ திவ்யா.

சில தினங்களுக்கு முன் இவரின் ஆபாசமான தம்படம் (செல்ஃபி) ஒன்று இணையத்தளத்தில் உலா வந்தது. இது பற்றி அவர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. சிலர் இதை உண்மை என்றும், ஒரு சிலர் மார்ஃபிங் என்றும் கூறி வந்தனர்.

தற்போது ஸ்ரீ திவ்யா இது குறித்து முதல் முதலாக மனம் திறந்துள்ளார். அவர் கூறியதாவது; “அதையெல்லாம் நான் பெரிதாக நினைக்கவில்லை. ஏனெனில், அதிகம் மக்களை கவர்ந்த நடிகைகளைத்தானே இது போன்று ‘மார்ஃபிங்’ செய்து விளையாடுவாங்க”.

#TamilSchoolmychoice

“ஆனா, இதில் அவர்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது என்றுதான் தெரியலை. இவ்ளோ கஷ்டப்பட்டு மார்ஃபிங் செய்கின்ற நேரத்தை, நல்லது செய்வதற்காக செலவழித்திருக்கலாம். சரி இதில் அவர்களுக்கு ஒரு அற்ப சந்தோஷம்” என கோபமாக கூறியுள்ளார் ஸ்ரீதிவ்யா.