சென்னை, ஏப்ரல் 14 – வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. ஆந்திர தேசத்து நடிகையான இவர், குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்கத் தொடங்கி, 2006-ல் பாரதி என்ற படத்துக்காக நந்தி விருது வாங்கியிருக்கிறார்.
அதோடு, விரைவில் சிறந்த நடிகைக்கான விருதினையும் பெறுவேன் என்றும் நம்பிக்கையுடன் சொல்கிறார். இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டியில்,
சினிமாவைப்பொறுத்தவரை எதையும் நாமாக தீர்மானித்து விட முடியாது. சினிமாதான் நம்மை தீர்மானிக்கும். நடித்த படங்களின் வெற்றியைப்பொறுத்து பாதை மாறும். அந்த வகையில், நான் தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பின்னர், 6 படங்களில் கதாநாயகியாக நடித்து விட்டுத்தான் தமிழுக்கு வந்தேன்.
அதனால் என்னிடம் நிதானம் உண்டு. குறைவான படங்களென்றாலும் நல்ல கதைகளை மட்டுமே தேர்தெடுத்து நடித்து வருகிறேன். மேலும், கதைக்காக என்னை முழுசாக மாற்றிக்கொள்வேன்.
அதேசமயம், மிகக்கவர்ச்சியாக நடித்து எனது தகுதியைக் கெடுத்துக்கொள்ள மாட்டேன். அந்தவகையில், சக நடிகைகளுடன் நடிப்புப்போட்டியில் குதிப்பேன். ஆனால் கவர்ச்சிப்போட்டியில் ஒருபோதும் இறங்க மாட்டேன் என கூறினார் ஸ்ரீதிவ்யா.