Home நாடு பிகேஆர் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவது குறித்து அன்வார் மறுபரிசீலனை!

பிகேஆர் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவது குறித்து அன்வார் மறுபரிசீலனை!

556
0
SHARE
Ad

anwar-cloneகோலாலம்பூர், ஏப்ரல் 14 – பிகேஆர் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து அன்வார் இப்ராகிம் மறுபரிசீலனை செய்து வருவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சைபுடின் நாசுதின் தெரிவித்துள்ளார்.

தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதற்கான தகுதிகள் உள்ளதா என்பது குறித்து இன்னும் சரியான முடிவு கிடைக்காததால், அன்வார் இந்த யோசனையை செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து இன்று பிகேஆர் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய சைபுடின், “இந்த விவகாரம் குறித்து அன்வார் தனது வழக்கறிஞர்களுடன் விவாதித்து வருகின்றார். இறுதி முடிவு விரைவில் வெளியாகலாம்” என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

எனினும், சட்டப்பூர்வமான விவாதங்கள் குறித்து தனக்கு வேறு எதுவும் தெரியாது என்றும் சைபுடின் குறிப்பிட்டார்.

ஓரினப்புணர்ச்சி வழக்கில் கடந்த மார்ச் 7 ஆம் தேதி அன்வாருக்கு மேல் முறையீட்டு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.

இருப்பினும், அன்வார் பிகேஆர் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்தார்.

அதோடு, தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்தில் முறையீடு செய்ய அன்வாருக்கு அனுமதியும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.