ஆஸ்திரேலியாவிற்கு சொந்தமான வெர்ஜின் புளு என்ற தனியார் நிறுவன போயிங் விமானத்தில் பயணம் செய்த அந்த விமானி ரகளையில் ஈடுபட்டதால் அவ்விமானத்தைக் கடத்த முயற்சி நடப்பதாக மற்ற பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.
அப்பயணி அவ்விமானத்தை கடந்த முயன்றதாக பீதி ஏற்பட்டதால் அவ்விமானம் பாலியில் உள்ள கூரா ராய் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இது தொடர்பாக விமானநிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில்,
“இவ்விமானத்தில் பயணம் செய்த விமானி முதலில் விமானியின் அறைக்கு செல்ல முயன்றார். அப்போது அவர் விமானத்தைக் கடத்தப்போவதாக சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் அவர் அளவுக்கு அதிகமாக குடித்ததில் போதையில் ரகளையில் ஈடுபட்டார் என்பது தெரிய வந்தது. ஆனால் அவருக்கு அவ்விமானத்தை கடத்தும் நோக்கம் இல்லை” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் ரகளையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.