Home உலகம் கப்பல் விபத்து எதிரொலி: தென்கொரிய பிரதமர் ராஜினாமா!

கப்பல் விபத்து எதிரொலி: தென்கொரிய பிரதமர் ராஜினாமா!

600
0
SHARE
Ad

chung-hong-won-resignsசியோல், ஏப்ரல் 28 – தென் கொரியாவில் ஜின்டோ தீவுக்கு 476 பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற சொகுசு கப்பல் விபத்துக்குள்ளான சம்பவத்தில் இதுவரை 180 க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

மேலும் பலரது உடலை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். மோசமான பருவ நிலை காரணமாக மீட்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இறந்தவர்களின் உறவினர்கள் ஆர்ப்பட்டம் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே, இந்த விபத்து நடந்த மறுநாள், அதாவது 17 ஆம் தேதி தென்கொரிய பிரதமர் சங்–காங்வன் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினரை  நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, ஆத்திரம் அடைந்த சிலர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர் மீது தண்ணீர் பாட்டிலும் வீசப்பட்டது.

#TamilSchoolmychoice

அவர்களின் செயல்களால் மனமுடைந்த அவர், நேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். கப்பல் விபத்தில் தனது அரசு மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை தொடர்ந்து அவர் பதவி விலகியுள்ளார்.