Home கலை உலகம் மீண்டும் “அம்மா” ஆகும் ஐஸ்வர்யா ராய்? அதிர்ச்சியில் இயக்குநர் மணிரத்னம்!

மீண்டும் “அம்மா” ஆகும் ஐஸ்வர்யா ராய்? அதிர்ச்சியில் இயக்குநர் மணிரத்னம்!

644
0
SHARE
Ad

aishwarya-rai-மும்பை, ஏப்ரல் 28 – உலக அழகியாகவும், பலரின் கனவு கன்னியாகவும் திகழ்ந்த ஐஸ்வர்யாராய்க்கும், இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் மகனும், நடிகருமான அபிஷேக்பச்சனுக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் முடிந்துள்ளது.

சமீபத்தில்தான் இவர்கள் தங்களது 7-ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினார்கள். ஐஸ்வர்யாராய்க்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு “ஆரத்யா” என பெயரிட்டுள்ளனர்.

குழந்தை பிறந்த பிறகு ஐஸ்வர்யாராய் சினிமாவில் நடிக்கவில்லை. மீண்டும் நடிக்கும்படி கேட்டு நிறைய இயக்குனர்கள் கதைகளுடன் அணுகினர். ஆனால், எதையும் ஏற்காமல் இருந்தார் ஐஸ்வர்யாராய்.

#TamilSchoolmychoice

மணிரத்னம் தெலுங்கு, தமிழில் எடுக்கும் படத்தில் ஐஸ்வர்யாராய் நடிக்க போவதாக சமீபத்தில் செய்திகள் வந்தன. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தார்கள். இந்த நிலையில்தான் அவர் மீண்டும் கர்ப்பமாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதைக் கேட்ட  இயக்குநர் மணிரத்னம் அதிர்ச்சியில் உள்ளார்.

மும்பையில் ஐஸ்வர்யாராயும், அபிஷேக்பச்சனும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஓட்டு போட வந்தனர். அப்போது ஐஸ்வர்யாராய் வயிறு பெரியதாக இருந்தது. எடையும் கூடியிருந்தது. இதன் மூலம் அவர் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.