Home இந்தியா மே 16-ஆம் தேதிக்குப் பிறகு வங்காளதேசத்தினர் விரட்டப்படுவார்கள் – மோடி

மே 16-ஆம் தேதிக்குப் பிறகு வங்காளதேசத்தினர் விரட்டப்படுவார்கள் – மோடி

465
0
SHARE
Ad

modiiகொல்கத்தா, ஏப்ரல் 29 – மேற்கு வங்காள மாநிலம் சேரம்பூரில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜியை கடுமையாக தாக்கி பேசினார்.இந்த கூட்டத்தில் மோடி பேசியதாவது,

மேற்கு வங்காள மாநிலத்துக்கு பீகாரில் இருந்து மக்கள் வரும் போது, அவர்கள் உங்களுக்கு (மம்தா) வெளி நபர்களாக தெரிகிறார்கள். ஒடிசாவில் இருந்து மக்கள் வரும் போது, அவர்கள் உங்களுக்கு வெளி நபர்களாக தெரிகிறார்கள். மார்வாரிகள் வெளி நபர்களாக தெரிகிறார்கள். ஆனால், வங்காளதேசத்தினர் வரும் போது மட்டும் உங்கள் முகம் பிரகாசமாகி விடுகிறது.

மம்தா பானர்ஜியாகட்டும், மாயாவதி ஆகட்டும், சோனியா காந்தியாகட்டும், இவர்கள் அனைவருமே ஓட்டு வங்கி அரசியலில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள். ஓட்டு வங்கி அரசியலுக்காக வங்காள தேசத்தினரை சிகப்பு கம்பளம் விரித்து மம்தா பானர்ஜி வரவேற்கிறார்.

#TamilSchoolmychoice

இந்த ஓட்டு வங்கி அரசியல் இந்திய இளைஞர்களின் வாழ்க்கையை இருளடைய செய்து விட்டது. இந்த நாடு இப்படி இயங்குவதை அனுமதிக்க முடியாது. உங்கள் ஓட்டு வங்கி அரசியலுக்காக நாட்டை நீங்கள் நாசப்படுத்துவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

சகோதர, சகோதரிகளே.. எழுதி வைத்துக் கொள்ளுங்கள். மே 16-ஆம் தேதிக்குப் பிறகு வங்காளதேசத்தினர் தங்கள் பெட்டி, படுக்கையுடன் எல்லையை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்பதை இங்கிருந்தபடியே நான் எச்சரிக்கை விடுக்கிறேன் என மோடி பேசினார்.