நியூயார்க், ஏப்ரல் 29 – சீக்கியர்கள் சார்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சோனியாவிற்கு எதிராக சீக்கியருக்கான நீதி என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கை, அமெரிக்க நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் 1984-ல் சீக்கியர்களுக்கு எதிராக கலவரத்தில் பலர் உயிரிழந்தனர். கலவரத்தில் தொடர்புடைய காங்கிரஸாரை சோனியா காந்தி பாதுகாப்பதாக கூறி வழக்கு தொடரப்பட்டது.
கலவரத்தில் பாதிக்கப்பட்ட சீக்கியர்களுக்கு சோனியா இழப்பீடு வழங்க வேண்டும் என்று சீக்கியருக்கான நீதி அமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது.
இவ்வழக்கு தொடர்பாக சோனியா காந்திக்கு சம்மன் அனுப்ப அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.