Home இந்தியா பிரித்திவிராஜ் தலைமையில் ஆட்டிசம் விழிப்புணர்வு நடனம்!

பிரித்திவிராஜ் தலைமையில் ஆட்டிசம் விழிப்புணர்வு நடனம்!

752
0
SHARE
Ad

IMG_1605சென்னை, ஏப்ரல் 29 – ‘ஆட்டிசம்’ பாதிக்கப்பட்ட குழந்தைகள் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த பிரபல நடிகர் பிரித்திவி ராஜ் முன்னிலை வகிக்க ‘WE CAN’ என்ற அமைப்பு ‘Flash Mob’ என்ற திடீர் நடன நிகழ்ச்சியை நடத்தியது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை சென்னை ராயபேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் மால் வணிக வளாகத்தில், பிரித்திவி ராஜ் தனது மனைவி பீனா மற்றும் மகன் உட்பட, ராக் டான்ஸ் குழுவினருடன் இந்த நிகழ்வை நடத்தினார்.

விடுமுறை நாள் என்பதால் அன்று வணிக வளாகத்தில் கூடியிருந்த பொதுமக்கள், இசையுடன் கூடிய இந்த திடீர் நடனத்தை கண்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.பொதுமக்கள் பலரும் இந்த விழிப்புணர்வு நடனத்தை கைதட்டி ஆராவாரம் செய்து ஊக்குவித்தனர்.

#TamilSchoolmychoice

“இது போன்ற ‘Flash Mob’ நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை ஒருங்கிணைப்பது மூலம் ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தலாம்” என்று ‘WE CAN’ அமைப்பின் நிறுவனர் கீதா ஸ்ரீகாந்த் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த நிகழ்வு குறித்து பிரித்திவி ராஜ் செல்லியலிடம் கூறுகையில், “ஆட்டிசம் குறைபாடு என்பது ‘Spectral Disorder’ என்று கூறுவார்கள். இந்த குறைபாடு ஆரம்ப நிலையில் இருந்தாலும், தீவிர நிலையில் இருந்தாலும், இது ஒரு நோய் அல்ல. மன வளர்ச்சி சம்பந்தப்பட்ட குறைபாடு தான். என் மகனுக்கு இந்த குறைபாடு தீவிரமாக இருந்தது. ஆனால் சரியாக கவனிக்கப்பட்டதன் மூலம் இன்று நல்ல நிலையில் இருக்கிறார். என் மகன் மிகச் சிறந்த அறிவாளி.  நடனம் ஆடுவார், பாடல் கேட்பார், டிவி பார்பார் மற்ற குழந்தைகளை போல் மிக இயல்பாக இருப்பார்.”

“ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எத்தைனையோ பேர் உலகம் முழுவதும் உள்ளனர். இந்த குறைபாட்டை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அவர்களை சரியாக வழி நடத்துவதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்ற முடியும். அதற்காக  ‘WE CAN’ என்ற அமைப்பை நடத்தி வருகின்றோம்”

“ஏப்ரல் 2 ஆம் தேதி உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம். அதை முன்னிட்டு இந்தியாவில் டில்லி, கொல்கத்தா, பெங்களூர், கோவா, புனே,டேராடுன், ஜலந்தர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஏப்ரல் 27 ஆம் தேதி இந்த விழிப்புணர்வு ‘Flash Mob’ நடைபெற்றது. சென்னை எக்ஸ்பிரஸ் மாலில் சுமார் 2000 பேர் இந்த நிகழ்வை கண்டனர்” இவ்வாறு தெரிவித்தார்.

செய்தி, படங்கள்: ஃபீனிக்ஸ்தாசன்