Home கலை உலகம் பிரித்திவிராஜ் இயக்கத்தில் புதிய மலேசியத் திரைப்படம் ‘மாயா’

பிரித்திவிராஜ் இயக்கத்தில் புதிய மலேசியத் திரைப்படம் ‘மாயா’

678
0
SHARE
Ad

189714_10150108516983277_7657168_nகோலாலம்பூர், பிப் 17 – பிரபல நடிகர் பப்லு பிரித்திவிராஜ் ‘மாயா’ என்ற மலேசிய திரைப்படத்தை விரைவில் இயக்கவுள்ளார். அதற்கான படப்பிடிப்பு வேலைகள் வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தொடங்க விருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

முழுக்க முழுக்க மலேசிய கலைஞர்களால் உருவாக்கப்படவுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும், மலேசியாவின் முக்கிய நகரங்களில் படமாக்கப்படவுள்ளன. குறிப்பாக மலாக்காவில் அதிகமான காட்சிகள் படமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதைப்படி ‘மாயா’ என்ற சிறுமிக்கு சிறுவயதில் ஏற்படும் மன பாதிப்பு, அவள் வளர்ந்து இளம் பெண் ஆன பின்பும் எப்படி தொடர்கிறது என்ற கருவை மையமாக வைத்து திரைக்கதை அமைத்துள்ளதாக பிரித்திவிராஜ் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

பிரித்திவிராஜ் ஏற்கனவே ‘ழ’ என்ற மலேசியத் திரைப்படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 – பீனிக்ஸ்தாசன்