Home இந்தியா மோடியின் சென்னை பேச்சுக்கு பட்ஜெட்டில் பதில் சொன்ன ப.சிதம்பரம்

மோடியின் சென்னை பேச்சுக்கு பட்ஜெட்டில் பதில் சொன்ன ப.சிதம்பரம்

540
0
SHARE
Ad

350x350_IMAGE27209975டில்லி,பிப்17- குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி விமர்சித்து பேசியதற்கு இடைக்கால பட்ஜெட் தாக்கலின் போது மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பதிலளித்தார்.

சென்னையில் பேசிய மோடி, ஹாவார்டு பல்கலைக் கழக படிப்பை விட ஹார்ட் ஒர்க் (கடின உழைப்பு)தான் மிகவும் முக்கியம் என்று பேசியிருந்தார்.

அந்தக் கூட்டத்தில் ப.சிதம்பரத்தின் ஹாவார்டு பல்கலைக் கழக படிப்பை குறிப்பிட்டும் அவ்வப்போது சாடியிருந்தார் மோடி. அந்தக் கூட்டத்தில்தான் ப.சிதம்பரத்தை “மறுவாக்கு எண்ணிக்கை (ரீ கவுண்ட்டிங்) அமைச்சர் என்றும் மோடி சாடியிருந்தார்.

#TamilSchoolmychoice

இதற்கு பதிலளிக்கும் வகையில் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய ப.சிதம்பரம், கடின உழைப்பை போதித்தவர்கள் எனது தாயாரும் ஹாவார்டு பல்கலைக் கழகமும் என்று குறிப்பிட்டு மோடிக்கு பதிலடி கொடுத்தார் ப.சிதம்பரம்.