Home கலை உலகம் ”ரஜினி” ரசிகர்களைக் குறிவைக்கும் சிவகார்த்திகேயன்!

”ரஜினி” ரசிகர்களைக் குறிவைக்கும் சிவகார்த்திகேயன்!

603
0
SHARE
Ad

10170818_1504394133121359_1668747480_nசென்னை, ஏப்ரல் 29 – நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் ரஜினியின் தோரனை அதிக அளவில் பிரதிபலிப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் செய்தி உலவுகின்றது. இன்றைய தலைமுறை நடிகர்களில் “சூப்பர் ஸ்டார்” ரஜினியின் படங்கள் பற்றிய தாக்கங்கள் இல்லாத நடிகர்களே இல்லை எனலாம்.

சில இளம் நடிகர்களோ ரஜினியின் தோரனையை தொடர்ந்து பின்பற்றி நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். குறிப்பாக சிவகார்த்திகேயனின் நடிப்பில் ரஜினியின் தோரனை தெரிகிறது.

இது பற்றி அவரிடம் கேட்டதற்கு, “நான் அவரோட ரசிகன். அவர் நடிச்ச எல்லா படத்தையும் நான் பார்க்காமல் இருந்ததில்லை. அப்படிப்பட்ட என் நடிப்பில் ரஜினி பாதிப்பு இருப்பது ஆச்சர்யப்படுகிற விஷயமல்ல.

#TamilSchoolmychoice

என் நடிப்பில் ரஜினி சாரோட பாதிப்பு இல்லைன்னாத்தான் ஆச்சர்யப்படணும்” என்று வெளிப்படையாகவே சொல்கிறார் சிவகார்த்திகேயன்.

தன் அடுத்தப் படத்துக்கு ரஜினி முருகன் என்று பெயர் சூட்டி இருப்பதன் மூலம், சிவகார்த்திகேயன் ரஜினி ரசிகர்களை தன் பக்கம் இழுக்க திட்டமிட்டிருக்கிறார் என்பது தெளிவாகிறது.

கோச்சடையான் படத்தில் நடிக்கவே விருப்பமில்லை, வேறு வழியில்லாமல் நடித்தேன், நடிப்பிலிருந்து ஓய்வு பெற விரும்புகிறேன் என்றெல்லாம் அவ்வப்போது சொல்லி வருகிறார் ரஜினி. அவர் இதே மனநிலையில் இருந்தால் இன்னும் ஒன்றிரண்டு வருடங்களில் நடிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்துவிடுவார்.

எனவே இப்போதே ரஜினி ரசிகர்களை குறிவைத்தால் தான், பிற்காலத்தில் மொத்த பேரும் தன் பின்னால் அணி திரள்வார்கள் என்பதுதான் சிவகார்த்திகேயன் போட்டு வைத்திருக்கும் கணக்கு என்று சினிமா வட்டாரத்தில் கூறப்படுகின்றது.